என் ஆட்ட வெட்ட போறாங்க, காப்பாத்துங்க.. ஆட்சியரிடம் புகார் தெரிவித்த சிறுமி.. அடுத்து நடந்தது என்ன?

ஆசையா வளர்த்த ஆட்ட வெட்ட போறாங்க, காப்பாத்துங்க.. புகார் தெரிவித்த சிறுமி: நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

நான் வளர்த்த ஆட்ட வெட்ட போறாங்க கலெக்டர் ஐயா, என் செல்ல ஆட்டுக்குட்டியை காப்பாத்துங்க என மாவட்ட ஆட்சியருக்கு வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது மகள் மல்லிகா. டில்லிபாபு உடல்நிலை குறைவால் கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் குணமடைந்தால் குலதெய்வ கோவிலுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து ஊர் விருந்து வைப்பதாக வேண்டிக் கொண்டனர்.

  இதனால் பல லட்ச ரூபாய் செலவு செய்து டெல்லி பாபு உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனால் சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை வெட்டி வேண்டுதலை நிறைவேற்ற தயாராகினார். இந்நிலையில் டெல்லிபாபுவின் மகள் மல்லிகா தான் செல்லமாக வளர்த்த ஆட்டைப் வெட்ட வேண்டாம் என பலமுறை கூறி உள்ளார். எனினும், தந்தை டெல்லி பாபு அதனை பொருட்படத்தவில்லை.

  Also read: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

  இதனைத் தொடர்ந்து ஆட்டை மீட்டெடுக்க மல்லிகா வேறு வழியின்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்துள்ளார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் கால்நடைத்துறை மூலமாக அந்த ஆட்டை வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டார்.

  கால்நடைக் குழு


  Also read: மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

  இதன் காரணமாக கால்நடைத்துறை அந்த ஆட்டை மீட்டு உள்ளனர். தற்போது அந்த ஆடு சிறுகுன்றம் கங்கை அம்மன் கோயிலுக்கு நேர்ந்து விட்டதால், ஆட்டை உயிருடன் கோயிலுக்கு அர்ப்பணித்து உள்ளதாக டில்லிபாபு தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆடு வெட்டப்படாமல் உயிரோடு இருக்கும் காரணத்தால் மல்லிகா சந்தோஷமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர் - ராபர்ட் எபினேசர்
  Published by:Esakki Raja
  First published: