தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது, இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர், புதிதாக 8,97,694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 1/ 1/ 2021 தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இடையே நவம்பர் 21 மற்றும் 22 தேதியும், டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26,74,446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3.18,28,727 பேரும், மூன்றாம் பாலினத்தவர்ஜ்கள் 7246 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21 ,82 ,120 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 21,39,395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. இறப்பு, இடமாற்றம், இரட்டைப்பதிவு, உள்ளிட்ட காரணங்களால் 5,09,307 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 3,32,743 வின்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 3,09,292 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது.
ஒரே தொகுத்திக்குள் முகவரி மாற்றம் செய்ய 1,84,791 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,75,365 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளர்களாக 8,97,694 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4,80,953 பேரும், பெண் வாக்காளர்கள் 4,16,423 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 318 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்த்த முதல் மாவட்டமாக சென்னையும், இரண்டாவது மாவட்டமாக சேலமும், மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டமும் உள்ளது. குறைந்த வாக்காளர்கள் சேர்த்த மாவட்டமாக நீலகிரி மாவட்டமும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 694845 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட துறைமுகம் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தமே 176272 பேர் மட்டுமே உள்ளனர்.
மாவட்ட வாரியாக பார்க்கும் பொழுது அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக சென்னை மாவட்டமும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டமும் உள்ளது.
பார்வையற்றோர், வாய் பேச முடியாதவர்கள், காது கேளாதோர், உள்ளிட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை 462597 ஆக உள்ளது.
இவைத்தவிர வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 47 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜனவரி 1 ஆம் தேதிபடி 18 வயது பூர்த்தியானவர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும், ஆன்லைன் மூலம் www.nvsp.in என்ற முகவரியில் வின்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை http://elections.tn.gov.in என்ற முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.