Home /News /tamil-nadu /

உயர் அதிகாரி திட்டியதால் காவல்நிலையத்திலேயே பெண் காவலர் தற்கொலை முயற்சி: தாம்பரத்தில் பரபரப்பு

உயர் அதிகாரி திட்டியதால் காவல்நிலையத்திலேயே பெண் காவலர் தற்கொலை முயற்சி: தாம்பரத்தில் பரபரப்பு

பெண் காவலர் தற்கொலை முயற்சி

பெண் காவலர் தற்கொலை முயற்சி

Tambaram : தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சக காவலர்கள் முன்பு திட்டியாக பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்திலேயே எலி மருந்தை சாப்பிடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையை அடுத்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செண்பகம் (வயது-35) என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். அதே காவல் நிலையத்தில் முன்று நாட்களுக்கு முன்பு புதிதாக லட்சுமி என்பவர் காவல் ஆய்வாளாரக பொறுபேற்று கொண்ட நிலையில், நேற்று காலை ரோல் கால் (Roll Call) சரியான முறையில் நடைபெறவில்லை என்று சக காவலர்கள் முன்பு ஆய்வாளர் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த செண்பகம் அருகில் உள்ள கடைக்கு சென்று எலி மருந்தை வாங்கி கொண்டு காவல் நிலையத்திலேயே வைத்து சாப்பிடுட்டுள்ளார். இதனால், சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளர்.

    இதன் கண்ட சக பெண் காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    Must Read : கால் வலி என்று போனது குத்தமா? வலது காலுக்கு பதில் இடது காலில் ஆப்ரேசன் செய்த அரசு மருத்துவர்

    உயர் அதிகாரிகளை மிரட்டுவதற்காக இது போன்ற தற்கொலை முயற்ச்சியில் ஈடுபடுவதை வழக்கமாக  கொண்டவர் செண்பகம் என்று போலிசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    செய்தியாளர் - சுரேஷ்
    Published by:Suresh V
    First published:

    Tags: Police, Suicide attempt, Tambaram

    அடுத்த செய்தி