உரிய ஆதாரங்கள் இல்லாததால், திருப்பத்தூரில் 22 கோடி மதிப்பிலான தங்க நகைகளைப் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்..

உரிய ஆதாரங்கள் இல்லாததால், திருப்பத்தூரில் 22 கோடி மதிப்பிலான தங்க நகைகளைப் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்..

திருப்பத்தூரில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், செங்கல்பட்டில் ஒரு கோடி ரொக்கம் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூரில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், செங்கல்பட்டில் ஒரு கோடி ரொக்கம் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 • Share this:
  சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனைச் சாவடிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை ஒசூரில் இருந்து வந்த காரில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவறை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்களின்றி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப எடுத்துச்சென்ற ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

  இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் தாமோதரநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட அதிகாரிகள், அருள்ராஜா என்பவரின் காரில் இருந்து 67 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அது மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  மதுரை செல்லூர் எல்ஐசி பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், திண்டுக்கல்லை சேர்ந்த செந்தில் முருகன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருந்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மதுரை லட்சுமிபுரம் பகுதியில் மெட்டல் கடை நடத்தி வரும் அவர், பொருட்கள் ஆர்டர் கொடுப்பதற்காக பணம் கொண்டு சென்றாக கூறப்படுகிறது. இருப்பினும் ரொக்கப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அது பறிமுதல் செய்யப்பட்டது.

  மேலும் படிக்க... முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

  இதேபோல், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காரில் இருந்து 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நெத்திமேடு பகுதியை சேர்ந்த எண்ணெய் ஆலை உரிமையாளர் கவின்ராஜ் வங்கியில் செலுத்த எடுத்துச்சென்ற போது தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: