வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்குச் செல்லும் 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இன்று சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி, ஹூப்ளி, மங்களூர், பெங்களூரு, கோழிக்கோடு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை , கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று மதியம் முதலே பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இன்று மாலை 4 மணி முதல் புயல் கரையை கடக்கும் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Rain, Cyclone Nivar