டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்...

Youtube Video

டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
முதல்வர் பிரச்சாரத்தின் போது பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி ஒருவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் மீது புகார் அளித்தார்.  இதனையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் பதவி பறிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலில் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்தநிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்த தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை புகார் கொடுக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உட்பட டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட மற்ற அதிகாரிகளையும் விசாரிக்க சிபிசிஐடியினர் முடிவு செய்துள்ளனர். இந்த புகாரில் டிஜிபி ராஜேஸ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க... கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: