ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண்களை அவதூறாக பேசிய உதயநிதியை மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? முதல்வர் பழனிசாமி கேள்வி

பெண்களை அவதூறாக பேசிய உதயநிதியை மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? முதல்வர் பழனிசாமி கேள்வி

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்று வந்ததாக விமர்சித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்க தவறியது ஏன் ? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஒரு கட்சியே அல்ல கம்பெனி என கடுமையாக சாடினார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்று வந்ததாக விமர்சித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருவதை ஏற்க முடியாது எனவும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

பெண்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், பெண்கள் குறித்து அவதூறாக விமர்சித்த தனது மகன் உதயநிதி ஸ்டாலினை கண்டிக்காததது ஏன் என கேள்வி எழுப்பினார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: ADMK, DMK, MK Stalin, TN Assembly Election 2021