கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் உட்பட கல்லூரி மாணவர்களுக்கான வகுப்பு துவங்கிவிட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரை 10,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் திருவள்ளுவர், அரக்கோணம், சிங்கப்பெருமாள் கோவில்,செங்கல்பட்டு, என பல பகுதிகளில் இருந்து பயணம் செய்கின்றனர். வழக்கமாக அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு பெரும்பாலும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி குறைந்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிடுவார்கள்.
ஆனால் தற்போது கூட்ட நெரிசல் நேரத்தில் அத்தியாவசிய பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மட்டுமே செல்ல முடியும் அதாவது காலை 7.30மணி முதல்9.30மணி வரை, அதேபோல் மாலை 4.30 முதல் 8மணி வரை மற்ற நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிகிடைக்கிறது. இதனால் காலை 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்க வேண்டிய மாணவர்கள் புறநகர் ரயில் சேவை இல்லாத காரணத்தால் பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.
ALSO READ | சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. அட்டவணை வெளியீடு
ஒரு மாணவர் அரக்கோணத்தில் இருந்து பேருந்தில் வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2.30 மணி நேரம் ஆகும். ஆனால் ரயிலில் 45 நிமிடத்தில் வந்துவிடுவார்கள். எனவே கல்லூரி திறக்கப்பட்டத்தில் இருந்து மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து நேரங்களிலும் பெண்கள் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் கல்லூரி மாணவிகள் வழக்கம் போல பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது மாணவர்களின் நலன் கருதி கூட்ட நெரிசல் நேரத்தில் அனுமதி இல்லை என்றும் விரைவில் கல்லூரி மாணவர்கள் அனுமதி குறித்த முடிவை தெற்கு ரயில்வே அறிவிக்கும் எனவும் கூறினர்.
கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் உட்பட கல்லூரி மாணவர்களுக்கான வகுப்பு துவங்கிவிட்டது. ஆனால் மாணவர்களால் உரிய நேரத்திற்கு வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ALSO READ | விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித் ஷா
எனவே புறநகர் ரயிலில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் அப்படி அனுமதித்தால், வகுப்பு நேரங்களை முழுமையாக கவனிக்க இயலும் என தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழக அரசின் ரயில்வே அதிகாரிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைத்து நேரங்களிலும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.