Home /News /tamil-nadu /

மகள்களுடன் கிணற்றில் சடலமாக மிதந்த ஆட்டோ ஓட்டுனர்.. செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மகள்களுடன் கிணற்றில் சடலமாக மிதந்த ஆட்டோ ஓட்டுனர்.. செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    செங்கல்பட்டில் ஆட்டோ ஓட்டுனர் இரு மகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல்( வயது 44) இவர் மனைவி ஜெயந்தி ( வயது-38). இவர்களுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற இருமகள்கள் இருந்தனர். இந்நிலையில் ஞானவேல் கடந்த 15 ம் தேதி மகள்களுடன் ஆட்டோவில் வெளியில் சென்றுள்ளார்.

    அவர்கள் வீடு திரும்பவில்லை எனக் கூறப்பட்டுகிறது. இதனையடுத்து ஜெயந்தி எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் உள்ள கிணற்றில்  அருகே ஆட்டோ ஒன்று அநாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு போலீஸார் சென்று பார்த்தனர். அப்போது அருகில் இருந்த விவசாய கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர்  மிதப்பதை கண்டுள்ளனர்.

    போலீஸார் மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்  எழும்பூரில் காணாமல் போன ஞானவேல் என்பதும் தந்தை ஞானவேலுடன்  மகள்கள் இருவரும்  கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்துள்ளனர்.

    Also Read:  தோழியின் வீட்டில் ஏடிஎம் கார்டால் கழுத்தறுத்துக்கொண்ட வாலிபர்.. நடந்தது என்ன?

    குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் ( செங்கல்பட்டு)




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Auto Driver, Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Death

    அடுத்த செய்தி