செங்கல்பட்டில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதன் (வயது 70). இவரது மனைவி லட்சுமிபாய். இவர்களது மகன் ஜெகநாதன், மருமகள் ஹேமலதா, இவரது மகன் கவின் ஆகிய 5 பேரும் நேற்று இரவு 8.45 மணிக்கு வீட்டில் இருந்தனர். அப்பொழுது,பத்துக்கும் மேற்பட்டோர் மங்கி குல்லா அணிந்து திடீரென வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்து அனைத்து அறைகளுக்கும் உள்ளே சென்றனர்.
வீட்டிலிருந்த 2 பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் பெண்களின் கழுத்தில் இருந்த மாங்கல்ய தங்கச்சங்கிலி உட்பட 20 சவரன் தங்க நகைகள், ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆக அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றனர். திருட வந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ள டிவியின் சவுண்டை அதிகமாக வைத்துவிட்டு அனைத்து விளக்குகளையும் அணைத்த பின்னர் மர்ம நபர்கள் கதவை சாத்திவிட்டு வீட்டின் எதிரே உள்ள கேட்டை பூட்டி சாவியைக் கொண்டு பூட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
சிறிது நேரம் கழித்த பின்னரே, வீட்டிலிருந்த கஜவரதன் தன்னுடைய வாயால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அதன் பின்னர் ஒவ்வொருவரின் கைகளிலும் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து கஜவரதன் அருகில் இருந்த தனது நண்பர்களுக்கு தெரிவிக்கவே, அச்சிறுபாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.