Home /News /tamil-nadu /

ஒரு உயிர் சிரிப்பா இருக்குல.. மனைவிக்கு வீடியோ அனுப்பி வாலிபர் தற்கொலை

ஒரு உயிர் சிரிப்பா இருக்குல.. மனைவிக்கு வீடியோ அனுப்பி வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Chengalpet Crime News: வாட்ஸ் அப் மூலம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவிக்கு வீடியோ அனுப்பிய வாலிபர்

    கல்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சதுரங்கப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதியில்  எரிந்த நிலையில் ஆண் சடலம்   கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இவருக்கும் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த  கல்பனாவுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

    Also Read: கோவை தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பிரபல நடிகரின் சகோதரர் கைது

    கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  கடந்த ஆறு மாத காலமாக  பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று ராஜேஷ் தனது மனைவியை  தன்னுடன் வீட்டிற்கு  வருமாறு அழைத்துள்ளார். ராஜேஷுடன் சேர்ந்து வாழ கல்பனா மறுத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ராஜேஷ் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை  எடுத்துக்கொண்டு கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதிக்கு வந்துள்ளார்.

    வாட்ஸ் அப் மூலம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவி கல்பனாவுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துளார். முதலில் எலி மருந்து குடித்தும் பின்னர்  பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொளுத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  சாலையில் சென்ற பொதுமக்கள் எரிந்த நிலையில் கிடந்த ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    Also Read: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்:  ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு) 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Video

    அடுத்த செய்தி