மக்களிடம் தடுப்பூசி பயத்தை ஏற்படுத்தியதே மு.க.ஸ்டாலின் தான் - எல்.முருகன் குற்றச்சாட்டு

எல்.முருகன்

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மெக்கானிக் ஷாப் அல்ல அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து எப்போது துவங்கலாம் என தெரிவிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பாஜகவின் மூத்த தலைவர் கே.எல்.லட்சுமணன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை எல்.முருகன் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  மோடியின் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளது, .இந்த நிலையில்தான் முதல் அலை தாக்கம் ஏற்பட்டது, அதை சிறப்பான முறையில் கையாண்டு கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனாவின் இரண்டாம் அலையும் பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

  தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இதேபோல் இந்த மாதத்திற்கு இரட்டிப்பாக வழங்கப்படும். குறிப்பாக ஓரிரு நாட்களில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தை வந்தடையும்.

  தடுப்பூசி வழங்குவது மாநிலத்தின் மக்கள் தொகை, அங்கு உள்ள பாதிப்பு சதவீதம், தடுப்பூசி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு வீணாக்கப்படுகிறது. மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான். அதன் காரணமாகவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

  செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் ஷாப் கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அதை ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும். தேவைப்பட்டால் மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: