Home /News /tamil-nadu /

Ford: மறைமலைநகர் போர்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Ford: மறைமலைநகர் போர்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஃபோர்டு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஃபோர்டு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மறைமலை நகரில் செயல்பட்டு ஃபோர்டு ஆலையில் புதிதாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொடங்கவுள்ளது தொடர்பாக பேச்சு நடத்தாமல், ஊழியர்களின் செட்டில்மெண்ட் குறித்து பேச ஆலை நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கிவரும் போர்டு தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கூறி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை மறைமலை நகரில்  ஃபோர்டு நிறுவனத்தின் ஆலை இயங்கி வருகின்றது. இங்கு, நிரந்திர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என 5000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதேபோல், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியிலும் ஃபோர்டு நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை உள்ளது.

    இந்த ஆலைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததாகவும் கடந்த 10 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம்  முடிவு செய்தது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை விலைக்கு வாங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையில் ஏற்கனவே பணியாற்றி வரும் தொழிலாளர்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்தப் போவதில்லை என்று குஜராத் மாநில அரசிடம் டாடா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதையும் படிங்க: ஹோம் லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு... EMI தொகை அதிகமாக இருந்தால் இதை செய்யுங்கள்!


    இங்கு எலக்ட்ரிக் வாகனங்களை டாடா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மறைமலை நகரில்  உள்ள ஆலையிலும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, புதிதாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொடங்கவுள்ளது தொடர்பாக பேச்சு நடத்தாமல், ஊழியர்களின் செட்டில்மெண்ட் குறித்து பேச ஆலை நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனை ஏற்க மறுத்தும் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏராளமான ஊழியர்கள் ஃபோர்டு நிறுவனத்துள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chengalpattu, Ford, Protest

    அடுத்த செய்தி