Home /News /tamil-nadu /

செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் பராமரிப்பு பணி: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் பராமரிப்பு பணி: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு பாலம்

செங்கல்பட்டு பாலம்

Palaru Bridge: சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில்  அனுமதிக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
     பாலாற்று பாலம் பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்றில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் நேற்று முதல் 20நாள் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதன்காரணமாக மற்றொரு பாலத்தில் வாகனங்களை அனுமதித்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இந்த பாதிப்பு நள்ளிரவு வரை 10 கிலோ மீட்டருக்கும் மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு பின்பு காவல்துறையினர் புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்து பழைய சீவரம் வழியாக செங்கல்பட்டுக்கு கனரக வாகனங்கள் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    Also Read: அம்பத்தூரில் ஒன்றரை வயது குழந்தை மாயம்.. போலீஸார் தீவிர விசாரணை

    மேலும் இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை மெய்யூர் பிலாப்பூர்  வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று சென்னை செல்கிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில்  அனுமதிக்கப்படுகின்றன. மேலும் வாகனங்கள் திருப்பி  அனுப்பப்படுவதால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாலப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது தற்போது ஆட்கள் குறைவாக பணி செய்து வருகிறார்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசியபோது மாவட்ட ஆட்சியர் இன்று தேசிய நெடுஞ்சாலை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டு பாலத்தை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பாலம் பணி  28 நாட்களில் முடிக்கப்படும் பின்னர் பக்கவாட்டில் உள்ள மற்றொரு பாலமும் இதேபோல் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தற்போது பாலம் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. தற்போது   சீரான வகையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர் : ராபர்ட்  (செங்கல்பட்டு)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chengalpet, Tamilnadu, Traffic

    அடுத்த செய்தி