மறைமலைநகரில் அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை : கொலையாளி ஒருவரை சுட்டுக்கொன்ற காவலர்

திருமாறன்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் முருகன் கோயிலில், அதிமுக பிரமுகரும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபருமான திருமாறனை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. அப்போது பாதுகாப்புக்கு வந்த காவலர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் கவவைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் முருகன் கோயிலில், அதிமுக பிரமுகரும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபருமான திருமாறனை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. அப்போது பாதுகாப்புக்கு வந்த காவலர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் கவவைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் மேன்பவர் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். தொழிலதிபரான இவர் தனது திருமணநாளான நேற்று மறைமலைநகர் ஶ்ரீ செல்வமுத்து குமரசுவாமி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட தனது குடும்பத்தினருடன் வழிபாட்டிற்கு வந்துள்ளார்.

  இவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் கூடவே இருக்க அனுமதி உண்டு. அப்படி இருந்தும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் போதே, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும் திருமாறனை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தனர். பின்னர், அங்கிருந்து தப்பிக்க முயன்ற மர்ம கும்பலை நோக்கி திருமாறனின் பாதுகாவலர் எழிலரசன் தனது துப்பாக்கியால் 6 ரவுண்டு சுட்டதில் திருவல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 19) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  ஒருவர் ஆபத்தான நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  இந்தச் சம்பவத்தால் மறைமலைநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது, சடலத்தை மீட்க விடமாமல் திருமாறனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

  மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி மற்றும் முருகன் ஆலயத்தில், இந்தச் சம்பவம் நடந்ததால் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் தெரித்து ஓடினர். இச்சம்பவத்தால் அப்பகுதி போர்களம்போல பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

  Must Read : உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாக மனைவியை கொன்ற கணவன்

   

  திருமாறனை கடந்த நான்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேபோல் திருக்கச்சூர் பகுதியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றயபோது திருமாரனின் கை குப்பாக்கியால் சுடமுயன்ரார். அப்போது, அவரை கொல்ல வந்தவர்கள் திருமாறன் மீது காரை மோதி கொலைசெய்ய முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: