• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு; செங்கல்பட்டில் முக்கிய சாலைகள் அடைப்பு!

ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு; செங்கல்பட்டில் முக்கிய சாலைகள் அடைப்பு!

ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா

ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா

20 வீடுகளில் உள்ளவர்கள் தவிர அந்த பகுதியில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அந்த பகுதியை சுற்றிலும் அதிகம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
    செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட சின்ன மணியக்கார தெருவில் ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அச்சாலையில் உள்ள 8 நுழைவாயிலும் அடைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதியில் இருந்து மக்கள் வெளியே வர அதிகாரிகள் தடைவிதித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா 2வது அலை மக்களை நாளுக்கு நாள் மிரட்டி வருகிறது. நகர பகுதியை பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டின் முக்கிய பகுதியான சின்ன மணியக்கார தெரு பகுதியில் 20 வீடுகளில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 வீடுகளில் உள்ளவர்கள் தவிர அந்த பகுதியில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அந்த பகுதியை சுற்றிலும் அதிகம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

    இது மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சுற்றி காவல்துறை உதவியுடன் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து தேவையில்லாமல் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    செய்தியாளர் - ராபர்ட் எபினேசர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: