செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 320 கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 100 பேர் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் நேற்று இரவு 8 மணி வரை 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்திருந்தனர். இந்நிலையில், இரவில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் அழுத்தம் சீராக இல்லாததால் அவர்கள் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் இணை நோய்கள் இருந்ததன் காரணமாக உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என வெளியான தகவலை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மறுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம். DME சார்பில் விசாரணை மேற்கொண்ட பின் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்த்து, நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வேண்டும் என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் எனவும் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpet, COVID-19 Second Wave, Doctors