பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 12-ம் வகுப்பில் வேதியியல் படிப்பு தேவையில்லை!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 12-ம் வகுப்பில் வேதியியல் படிப்பு தேவையில்லை!
வேதியியல்
  • Share this:
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 11, 12-ம் வகுப்புகளில் வேதியியல் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் புதிய விதிமுறையினை அறிமுகம் செய்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தற்போது கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயம் என்கின்ற நடைமுறை உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கட்டாயம் படித்தால் போதுமானது. இதன்மூலம் வேதியியல்யில் பாடம் கட்டாயம் இல்லை.

மேலும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் கணினி அறிவியல், உயிர் அறிவியல் பாடங்களை படித்திருந்தாலும் பொறியியல் படிப்பில் சேர முடியும். மேலும் இந்த புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டே, அதாவது இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பிறகு நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் நடைமுறைக்கு வர உள்ளது.


மேலும் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு JEE மூலம் மாணவர் சேர்க்கை நடத்துகின்றது. இந்தத் தேர்வுகளிலும் வேதியியல் பாடம் என்பது தெரிவு படமாக மாற்றப்பட உள்ளது.

Also see:
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்