Home /News /tamil-nadu /

செம்பரம்பாக்கத்தில் 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

செம்பரம்பாக்கத்தில் 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கத்தில் இருந்து 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடலூரில் 86மி.மீட்டர் , நாகை 47மி.மீட்டர் மழை பொழிந்துள்ளது.

    15 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்திய இராணுவத்தின் 8 குழுக்கள் தமிழகம் வந்தடைந்துள்ளது 7.45 மணியளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 170கி.மீட்டர் தொலைவில் நிவர் நிலை கொண்டுள்ளது.

    மேலும் படிக்க: Cyclone Nivar | நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் மூடல்..

    120-130கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். புயலின் வெளிவட்ட பாதை கரையை கடக்க துவங்கியது. நள்ளிரவில் 7ஆயிரம் கன அடி நீர் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும். 15 ஆயிரம் கன அடி நீர் வரை செம்பரபாக்கத்திலிருந்து திறக்கலாம் . 60ஆயிரம் கன அடி நீரை அடையாறு தாங்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத் தேவையில்லை” இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Cyclone Nivar, Nivar

    அடுத்த செய்தி