முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த ஆண்டில் 2-வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு

இந்த ஆண்டில் 2-வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பttathu. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. 23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது. அடையாறு ஆற்றில் தாழ்வான பகுதியில் வாழும் மக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை செய்தியை வழங்க வேண்டும் என்று  மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளது.

செம்பரபாக்கத்தில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யும் அதே நேரத்தில் கனமழையின் காரணமாக

தாம்பரம், ஒரகடம், படப்பை, மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளில் அதிக அளவிலான நீர் பெருக்கெடுக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு நதி பாயும் ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் நிறுத்தப்பட்டது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Chembarambakkam Lake