நிவர் புயல் காரணமாக 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியது. இதனால் இன்று மதியம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட நீரானது திருநீர்மலை, அனகாபுத்தூர், திருமுடிவாக்கம், கவுல் பஜார் பகுதிகளில் உள்ள அடையாற்றில் கலந்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது இதை ஆர்வமுடன் பொதுமக்கள் பலர் பார்த்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் மீது சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்து கொட்டும் மழையென்றும் பாராமல் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Cyclone Nivar: கடலூரில் இருள் சூழ்ந்தது - காற்றுடன் கனமழை
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கன அடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.