நீலகிரி: குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தையும் கிணற்றுக்குள் விழுந்து பரிதாப பலி

சிறுத்தையும் குரங்கும் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..

கோத்தகிரி அருகே சிறுத்தையும் குரங்கும் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

  • Share this:
கோத்தகிரி அருகே குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தையும், அந்தக் குரங்குடன் சேர்ந்து கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் ஏராளமான தனியார் எஸ்டேட்டுகள் உள்ளன. இங்குள்ள பொம்மன் எஸ்டேட்டில் உள்ள கிணற்றை தொழிலாளர்கள் சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்தனர். பின்னர் அது குறித்த தகவலை கீழ் கோத்தகிரி வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

Also read: உணவகங்களில் பேசாமல் சாப்பிட்டாலே கொரோனா பரவாதாம்..! ஆய்வில் தகவல்

அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், ஏணி மூலம் கிணற்றுக்குள் இறங்கி இறந்த சிறுத்தையின் உடலை மீட்டனர். அத்துடன் இறந்துபோன குரங்கின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சிறுத்தை குரங்கை வேட்டையாட துரத்தி வந்திருக்கலாம் என்றும், அப்போது குரங்கும் சிறுத்தையும் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கக்கூடும் என்றும் தெரிய வந்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: