• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு செக்: கண்காணிப்பு குழு அமைக்கும் தமிழக அரசு!

முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு செக்: கண்காணிப்பு குழு அமைக்கும் தமிழக அரசு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டு காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை முறையாக அறிவிக்கப்படும், தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

  • Share this:
முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை போன்ற பெருநகரங்களில் முறைகேடாக கட்டிடங்கள் கட்டப்படுவது அதிகமாக உள்ளது.  மவுலிவாக்கத்தில்  அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டிடம் கடந்த 2014ம் ஆண்டு இடிந்து விழுந்த விபத்தில்  61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. எனவே, முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி,  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பகுதிகளில் முறைகேடாக கட்டும் கட்டிடங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டு காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை முறையாக அறிவிக்கப்படும், தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: இந்த கருவியை பொருத்தாவிட்டால் மின் இணைப்பு வழங்கப்படாது - மின்சார துறை அதிரடி...


வீட்டுவசதி வாரிய பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்றுகள் பெற இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தது..


கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், ஏற்கனவே செயலாளர் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், இந்த வாரத்தில் தானும் நேரில் ஆய்வு மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: