Home /News /tamil-nadu /

சீட்டு பணம் ரூ.5 லட்சத்தை சுருட்டியதாக பெண் காவலர் மீது புகார்... நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் வேதனை

சீட்டு பணம் ரூ.5 லட்சத்தை சுருட்டியதாக பெண் காவலர் மீது புகார்... நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் வேதனை

சீட்டு பணம் மோசடி

சீட்டு பணம் மோசடி

சீட்டு பணம் மோசடி செய்ததாக பெண் காவலர் மீது ராயபுரத்தில் பொதுமக்கள் புகார்

    சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தான் குடியிருந்த பகுதியின் அருகே வசித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆனந்தி என்பவரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார். இந்தப் புகாரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    Also Read: கைவிட்ட காதல் கணவன்.. கண்ணீருடன் இளம்பெண் - எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

    மாதத் தவணையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சீட்டிற்கு ரூ.1000  வீதம் ரூ.12000 கட்டியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு 15,000 திருப்பி தருவதாக ஆனந்தி கூறியதன் பெயரில் ரவிக்குமார் தனது மனைவி மகள் பெயரில் தனது மகளின் திருமணத்திற்காக உபயோகப்படும் என்று எண்ணி 30 சீட்டு போட்டுள்ளார்.மேலும் தனக்கு அருகில் உள்ளவர்களுக்கும் ஆனந்தியை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களும் ஆனந்தியிடம் சீட்டு கட்டியுள்ளனர்.  மொத்தம் 43 சீட்டுகள் வீகிதம் 6,75,000 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட வேண்டும்.

    இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பித் தராமல் ஆனந்தி அலைக்கழித்து வந்துள்ளார். இதுதொடர்பாக ராயபுரம் N1 காவல் நிலையத்தில் அக்டோபர் மாதம் 27-ம் தேதி புகார் அளித்து சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. ஆனந்தி ஒரு காவலர் என்பதால் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த தங்களை அலைக்கழித்து வருவதாகவும் ஆனந்தி மீது  நடவடிக்கை எடுக்காமல் பணத்தை சிறிது சிறிதாக கொடுப்பதாக கூறி பலமுறை ராயபுரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தவர்கள் வரவழைத்து அலைக்கழித்து பின்னர் சிறிது சிறிதாக 1,30,000  மட்டும் திருப்பி கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ரவிக்குமார் கூறுகிறார்.

    Also Read: போலீசாரை திட்டிய அமைச்சர்.. சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என மிரட்டல் - வீடியோ

    ஆனந்தியிடம் இருந்து 5,45,000 ரூபாய் வர வேண்டும் அதனை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வருகிறார். ஆன்லைன் மூலமாக பணம் கட்டியதற்கான ஆதாரங்கள் மற்றும் பணம் திருப்பித் தருவதற்காக கொடுக்கப்பட்ட ரிட்டன் ஆன காசோலைகள் ஆடியோ ஆதாரங்கள் என அனைத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். காவலர் என்பதற்காக ஆனந்தி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெரும் மனவேதனை அளிப்பதாக ஆனந்தியிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூறுகின்றனர்.

    செய்தியாளர் : அசோக்குமார்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cheating, Cheating case, Chennai, Crime | குற்றச் செய்திகள், Police, Tamil News

    அடுத்த செய்தி