மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்புகள் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

news18
Updated: June 13, 2018, 9:50 PM IST
மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்புகள் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
news18
Updated: June 13, 2018, 9:50 PM IST
புதுச்சேரியில் அரசு பள்ளி  மாணவர்களுக்கு மதியம் வழங்கப்பட்டு வரும் சத்துணவில் சப்பாத்தி, இனிப்பு வகைகள் ஆகியவை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சன்னியாசிகுப்பம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடத்தை அவர் இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், புதுச்சேரியில் மதிய உணவு திட்டம் மேம்படுத்தப்படும் என்று கூறினார். இதையடுத்து அரசு பள்ளி  மாணவர்களுக்கு மதிய உணவில் தற்போது வழங்கப்படும் சாப்பாட்டுடன் சேர்த்து வேறு சில பொருட்களும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

குறிப்பாக சப்பாத்தி, காய்கறி, இனிப்பு, தயிர் போன்றவை இன்னும்  இரண்டு மாதங்களில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதுவை முதல்வர் அறிவித்துள்ள புதிய உணவு திட்டம் மகிழ்ச்சியளிப்பதாக அம்மாநில மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...