ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நவம்பர் 20ல் தொடக்கம்.. சிறிய சூறாவளி .. வானிலையில் அடுத்த மாற்றம் - எச்சரிக்கை கொடுத்த வெதர்மேன்

நவம்பர் 20ல் தொடக்கம்.. சிறிய சூறாவளி .. வானிலையில் அடுத்த மாற்றம் - எச்சரிக்கை கொடுத்த வெதர்மேன்

வெதர்மேன்

வெதர்மேன்

இதற்கு பிறகு ஒரு வார காலத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும் தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில், நகைச்சுவையாக பதிவிடுவது வழக்கம்.  இந்நிலையில் அவர் தமிழ்நாட்டில் இருக்கப்போகும் வானிலையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஒன்று இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே உருவாகலாம். அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் முதல் சக்கரம் இது என்றும் கூறலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மற்றுமொரு பதிவில்,  ஒரு வார காலத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும். காலை நேரங்களில் உங்களின் வாகனங்களில் அல்லது புற்களில் பனி இருக்கும்.

    பள்ளிகூடத்திற்கு விடுமுறை கேட்கும் மாணவர்கள் தங்களின் எதிர்ப்பார்ப்புகளை குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. குன்றத்தூர் மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு இருக்கிறது. மீதம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

    தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி மற்றும் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்யும். மேலும், கொங்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் கூட மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    Also Read : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Rain, Rain Update, Rainfall, Weather News in Tamil