Tamilஐ Tamizh ஆக மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் கோரிக்கை!

சட்டப்பேரவை

தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுதும் போது ழகர உச்சரிப்போடு எழுத வழிவகை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் கோரிக்கை வைத்தார்.

  • Share this:
    தமிழ் மொழியை ஆங்கிலத்தில் Tamizh என்று எழுத வழிவகை செய்ய வேண்டும் என்று திமுக  சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் பேரவையில் கோரிக்கை வைத்தார்.

    தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது. மானிய கோரிக்கையின்போது தனது கன்னி பேச்சை வெளிப்படுத்திய வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுதும் போது ழகர உச்சரிப்போடு எழுத வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ”செம்மொழியில் சிறந்த எழுத்தான ழகரத்தை பயன்படுத்தி ஆங்கிலேயர் விட்டுச்சென்ற Tamil என்பதை Thamizh என மாற்றி அமைக்க முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்” என்று  வில்லிவாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் பேசினார்.

    இதையும் படிங்க: அதிமுக முதல்வர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என பெருந்தன்மை காட்டினார் முதல்வர்: அமைச்சர் நெகிழ்ச்சி


    “பச்சையப்பன் கல்லூரி மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கி அதனை பல்கலைக்கழகமாக  உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கையை  உயர் கல்வித்துறை அமைச்சர்  பொன்முடிக்கு வைக்கிறேன். மேலும் செம்மொழியில் சிறந்த எழுத்தான ழ கரத்தை பயன்படுத்தி ஆங்கிலேயர் விட்டுச்சென்ற Tamil என்பதை Thamizh என மாற்றி அமைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்”  என்று அவர் கோரிக்கை வைத்தார்.

    மேலும் படிக்க: தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    Published by:Murugesh M
    First published: