ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் தினத்தில் வங்கித் தேர்வா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கடிதம்...!

பொங்கல் தினத்தில் வங்கித் தேர்வா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கடிதம்...!

திமுக எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன் கடிதம்

திமுக எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன் கடிதம்

பொங்கல் அன்று நடைபெறவுள்ள எஸ்.பி.ஐ தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன் கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்பிஐ கிளர்க் ( Junior Associates - Constomer Support and Sales) பதவிக்கு நாடு முழுவதும் முதல் நிலை தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, தற்போது முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பொங்கல் அன்று தேர்வு நடைபெறும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பொங்கல் நாள் அன்று தேர்வு நடைபெறும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு எழுதும் தேர்வர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக தேர்வர்கள் குறித்த நிலையை எடுத்துரைத்து, தேர்வு தேதியை மாற்றக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தில், தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா பொங்கல் பண்டிகை. தை எனப்படும் தமிழ் மாதத்தின் தொடக்கத்தை இப்பண்டிகைக் குறிக்கிறது. பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த திருவிழா கருதப்படுகிறது.

அப்படிப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் ஜனவரி 15ஆம் தேதி எஸ்.பி.ஐ வங்கிக்கான தேர்வு நடைபெறுவது தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வர்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வர்கள் கவலைகளைப் புரிந்து புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Tamilachi ThangaPandian