• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதை மாற்றம் - வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதை மாற்றம் - வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதை மாற்றம் -

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதை மாற்றம் -

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காலை 11 மணி அளவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை பகுதியை நெருங்க உள்ளது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, கடலூர் அருகே காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டவுக்கும் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை காலை முதல் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் ராணிப்பேட்டையிலும், இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கும் வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில், இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை வர வாய்ப்புண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில்,அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: