Home /News /tamil-nadu /

தருமபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையம் முகவரி மாற்றம்

தருமபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையம் முகவரி மாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

TNPSC Group 2 Exam | தருமபுரி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வு மையம் ஒன்றின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
    தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    இந்தத் தேர்வுகளுக்கு பிப்ரவரி 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 11 லட்சம் பட்டதாரிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு 60 விழுக்காடு பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வுகள் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது.

    Also Read : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பணியாளரை அதிகாரி எட்டி உதைக்கும் அதிர்ச்சி வீடியோ

    இந்நிலைியல் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் குரூப் 2ஏ எழுதும் மையம் மாற்றம் செய்யப்பட்டள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த தேர்வை எழுத உள்ள தேர்வர்களின் அனுமதி சீட்டில் அறை எண் 039, அரசு மேல்நிலைப்பள்ளி, கூலி கொட்டாய், ராஜா கொல்லஅள்ளி அஞ்சல், பி.அக்ரஹாரம், நல்லம்பள்ளி தாலுகா என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக அரசு மேல்நிலைப்பள்ளி, பி.அக்ரஹாரம், பென்னாகரம் மெயின் ரோடு என்பதே உரிய தேர்வு மையம் ஆகும்.

    எனவே அறை எண் 039-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பி.அக்ரஹாரம், பென்னாகரம் மெயின் ரோடு என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
    Published by:Vijay R
    First published:

    Tags: Dharmapuri, TNPSC

    அடுத்த செய்தி