Home /News /tamil-nadu /

இன்டர்சிட்டி , அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

இன்டர்சிட்டி , அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

ரயில் - மாதிரிப்படம்

ரயில் - மாதிரிப்படம்

திருநெல்வேலி அருகே செங்குளம்-வட பணகுடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக இன்டர்சிட்டி மற்றும் அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி அருகே செங்குளம் - வட பணகுடி இடையே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நாளை (21ஆம் தேதி) மற்றும் 24ஆம் தேதிகளில் திருநெல்வேலி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் இந்த ரயில் நெல்லையில் இருந்து வழக்கமான நேரத்திற்கு திருச்சிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பதிலாக இந்த ரயில், நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். இன்று (20 ஆம் தேதி) தாம்பரத்தில் இருந்து நாகர்கோயில் வரை இயக்கப்படும் அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரையில் இயக்கப்படும் ரயில் 21 ஆம் தேதி மட்டும் நெல்லையில் இருந்து புறப்படும். அதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று நாகர்கோவில் புறப்படும் வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லையுடன் நிறுத்தப்படும்.

    Must Read : மின் கட்டண உயர்வு - ஆகஸ்ட் 22ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

    மறு மார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் ரயில் நாளை ஒரு நாள் மட்டும் நெல்லையிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Southern railway, Train, Train ticket

    அடுத்த செய்தி