ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யும் வகையில், கட்சியின் சட்ட விதி 20 பிரிவு- 2 திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இனிமேல் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதாக, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நேற்று நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக-வின்செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 11 தீர்மானங்களுடன் ஒரு சிறப்பு தீர்மானமும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, அதிமுகவின் பொன் விழாவை எழுச்சியுடன் கொண்டாட, தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கால  அட்டவணையை தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் திமுக அரசு தோல்வி அடைந்து இருப்பதாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்க அரசு தவறியதாகவும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது,

தொடர்ந்து, அதிமுக-வின் சட்ட விதிகளில் 3 திருத்தங்களை செய்வதாக, சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யும் வகையில், கட்சியின் சட்ட விதி 20 பிரிவு- 2 திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மட்டும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என கட்சி சட்ட விதி 43-ஐ திருத்தியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் விதிக்கு மட்டும், விலக்கு அளிக்கவோ, தளர்த்தவோ அதிகாரம் இல்லை என, அதிமுக-வின் சட்ட விதி 45-ஐ திருத்தியுள்ளனர்.

Must Read : ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த மாற்றங்கள் இன்று முதலே அமலுக்கு வருவதாகவும், அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

First published:

Tags: ADMK, AIADMK, Edappadi Palanisami, O Panneerselvam