ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு- எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கிறாரா?

மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு- எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கிறாரா?

மு.க.ஸ்டாலின், சந்திர சேகர ராவ்

மு.க.ஸ்டாலின், சந்திர சேகர ராவ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்து, நேற்று திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்தநிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

  அதேபோல, சந்திரசேகர ராவ்வும் மனைவி மற்றும் மகனுடன் வந்திருந்தார். இல்லத்துக்கு வந்த சந்திரசேகர ராவை வாயில் வரை சென்று மு.க.ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்தச் சந்திப்பு தேசிய அளவில் அரசியல் களத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க மீது எதிர்ப்பு காட்டாமல் இருந்த சந்திரசேகர ராவ், சமீபகாலமாக பா.ஜ.கவை காட்டமாக விமர்சனம் செய்து வருகிறது.

  இந்தநிலையில், மு.க.ஸ்டாலினை சந்தித்தது பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். முன்னதாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கு முன்பு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Karthick S
  First published: