முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தி.மு.க உடன் முக்கிய ஆலோசனை...? அறிவாலயம் வருகிறார் சந்திரபாபு நாயுடு...!

தி.மு.க உடன் முக்கிய ஆலோசனை...? அறிவாலயம் வருகிறார் சந்திரபாபு நாயுடு...!

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

அறிவாலய திருமண மண்டபத்தில் தனது உறவினரின் திருமணத்துக்காக மட்டுமே சந்திரபாபு நாயுடு வருவதாகக் கூறப்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மதியம் சென்னையில் உள்ள அறிவாலயத்துக்கு வருகை தருகிறார்.

ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நிறைவடைந்தது. ஆந்திராவில் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று பல இடங்களிலும் அடிதடியும் கலவரங்களும் நடந்தேறின.

இதுகுறித்து முறையாக சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார். தற்போது தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னையில் அறிவாலயத்துக்கு சந்திரபாபு நாயுடு வருகிறார்.

அறிவாலய திருமண மண்டபத்தில் தனது உறவினரின் திருமணத்துக்காக மட்டுமே சந்திரபாபு நாயுடு வருவதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில் இருப்பதால் சந்திரபாபு உடனான சந்திப்பு நிகழாது என்றும் முக்கிய திமுக நிர்வாகிகளை மட்டும் சந்திரபாபு சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் சோதனையை அடுத்து ஆர்.பி உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Anna Arivalayam, Chandhrababu naidu