• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'ஸ்டாலினை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்’- சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

'ஸ்டாலினை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்’- சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு.

”மோடி தமிழக நலனை கண்டுகொள்ளவே இல்லை. டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோதும் கூட மோடி கண்டுகொள்ளவே இல்லை”

  • News18
  • Last Updated :
  • Share this:
    ”தமிழக மக்கள் ஸ்டாலினைத்தான் அடுத்த முதல்வராக தமிழக மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-வின் முக்கியத் தலைவர்களான ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் உடனான கலந்துரையாடலின் பின்னர் சந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஆந்திராவுக்கும் தமிழகத்துக்கும் இடையே அண்ணன்- தம்பி உறவு உள்ளது. தமிழகத்தைத் தற்போது மோடி தான் ஆட்சி செய்து வருகிறார். வருகிற தேர்தலில் தமிழ் மக்கள் அதிமுக-வுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜக-வுக்கு நீங்கள் வாய்ப்பு அளிக்கும் சூழல் உருவாகும்.

    மோடி தமிழக நலனை கண்டுகொள்ளவே இல்லை. டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோதும் கூட மோடி கண்டுகொள்ளவே இல்லை. தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவரான கருணாநிதியின் மகன் ஸ்டாலின். ஸ்டாலினையே மக்களும் முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள்.

    தமிழக வாக்காளர்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் சீரழிந்துள்ளது. ஆந்திராவில் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்கின்றனர்” எனப் பேசினார்.

    மேலும் பார்க்க: தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்!





    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: