தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் , ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் 18.01.2021, 19-01-2021 மற்றும் 20.01.2021 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அத்துடன் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதில் அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது.
  அதிகபட்சமாக புதுக்கோட்டை கன்னியாகுமாரி , இளையான்குடி,  அம்பாசமுத்திரம், மானாமதுரை மணமேல்குடி, தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

  மேலும் படிக்க... நெல்லையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி அசத்தல்

  மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை
  வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: