Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், 20.08.2022 முதல் 22.08.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23.08.2022 மற்றும் 24.08.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
    சிறுகமணி KVK (திருச்சிராப்பள்ளி) 8, நகுடி (புதுக்கோட்டை), அயின்குடி (புதுக்கோட்டை) தலா 6, துறையூர் (திருச்சிராப்பள்ளி) 4, மணமேல்குடி (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம் ) தலா 3, மலையூர் (புதுக்கோட்டை) லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), ஆண்டிபட்டி (தேனி), வேம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 2

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    20.08.2022 முதல் 24 .08.2022 வரை இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    வட ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Heavy rain, Rain Update, Tamil Nadu

    அடுத்த செய்தி