• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும்; 10ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும்; 10ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

கனமழை

கனமழை

டெல்டா மாவட்டங்களில்  நாளை மறுநாள்(நவம்பர் 10) 20 செண்டி மீட்டர் அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் சென்னையில் மிக  கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. 

  • Share this:
    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையும், அதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

    தொடரும் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, “தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

    இது அதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும் என்றும் இதன் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும்” என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நவம்பர் 10ம் தேதி சென்னையில் கனமழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும்,  கடலூர், பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நவம்பர்ம் 10ம் தேதி அன்று 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு?


    காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறியபின்னரே அதன் திசை குறித்து தெரிவிக்க முடியும் என்று தெரிவித்த புவியரசன், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தெற்கு ஆந்திர, தமிழக கடற்கரை, குமரி கடல், இலங்கை கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் படிக்க: செல்ஃபி எடுக்கும்போது அருவியில் தவறி விழுந்த சிறுவன்.. 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: