தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 23, 2019, 2:33 PM IST
  • Share this:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, நாகை மாவட்டம் கொள்ளிடம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் 5செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம் சின்னக்கல்லார், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மேலும் திருவாரூர் மாவட்டம் கொடை வாசல், மன்னார்குடி, சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், நாகை தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.மேலூம் பார்க்க... வங்கியில் 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் மாயம்
First published: August 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading