அடுத்த 2 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோப்புப்படம்
  • Share this:
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி  செல்சியஸ்,  குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி  செல்சியஸ்,  குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச  மழைபெய்த  விவரம்: புதுக்கோட்டை 10 செ.மீ, நத்தம்  தானியங்கி மழைமானி 9செ.மீ, நத்தம், வைகை அணை தலா 7செமீ திண்டுக்கல், நிலக்கோட்டை, மைலம்பட்டி  அம்பாசமுத்திரம் 5செமீ, ஆண்டிபட்டி, திருப்பத்தூர் 9 செமீ, தரமணி, செஞ்சி  நாமக்கல், அறந்தாங்கி, கள்ளிக்குடி, மலையூர் ,  கலசப்பாக்கம், முண்டியம்பாக்கம்  தலா 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க...வந்தவாசி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில்  தென்மேற்கு  மற்றும் மத்திய மேற்கு   அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும. அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading