தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைபெய்யும்: வானிலை ஆய்வு மையம்

மழை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை,நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்

  கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 2 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

  மீனவர்களுக்கான எச்சரிக்கை

  கேரளா கர்நாடக கடலோரப் பகுதி லட்சத் தீவு பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

  சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டடுள்ளது.

  மேலும் படிக்க...

  கேரள அதிவேக ரயில் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
   
  Published by:Vaijayanthi S
  First published: