மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோப்புப் படம்
  • Share this:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கூடலூர் பஜார் , கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சோலையார் மற்றும் சின்கோனா, மதுரை மாவட்டம் புளிப்பட்டியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் கோவா, மஹாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறனர்.
கடல் அலை 3 முதல் 3.5 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் எழும்பக்கூடும்.


மேலும் படிக்க...





First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading