அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 15, 2019, 4:09 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: August 15, 2019, 4:09 PM IST
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக வடதமிழகம் மற்றும் கடலோர தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குமரி கடல் பகுதியில் மேற்கு திசை நோக்கி 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் திருத்தணி, சோழவந்தான், அரக்கோணம் ஆகிய இடங்களில் 6 செ.மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னகலாரில் 5 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Loading...

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...