Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்குப் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புள்ளம்பாடி 12 செமீ, கல்லக்குடி, திருத்தணியில் தலா 11 செமீ, வேப்பந்தட்டை, அம்முடி தலா 10 செமீ, கரூர், புவனகிரி தலா 9 செமீ, சோளிங்கர், பொண்ணை தலா 8 செமீ, தம்மம்பட்டி அரியலூர், திருப்பட்டூர், ஆர். கே .பேட்டை ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

    மேலும் படிக்க...வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கைகள் என்னென்ன?

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    ஆகஸ்ட் 24 முதல் 28 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

    தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 25.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.3 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Indian meteorological department, Rain

    அடுத்த செய்தி