தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

மாதிரிப் படம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மிக கனமழை, 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கடலூர், விழுப்புரம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை முதல், மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

  ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் புவியரசன் கூறியுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில், நாளை, நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களில் ஒன்பதாம் தேதி இடிமின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இதுதான் காரணமா?

  10ம் தேதியும், அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரத்தில் 16, MGR நகரில் 15, சோழிங்கநல்லூர் , DGP அலுவலகத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செம்பரம்பக்கம், பூவிருந்தவல்லி, கொரட்டூர், தரமணி, , சென்னை விமானநிலையத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

  இதேபோன்று பெரம்பூரில் 12, ஆலந்தூர், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: