தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோப்புப்படம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் தாமரை பாகத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி பந்தலூரில் 9, நீலகிரி தேவாலா, கரூர் பாலவிடுதி தலா 8 சென்டி மீட்டர் மழையும்,கோவை சின்னகல்லாறு புதுக்கோட்டை ஆதனக்கோட்டை தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.



    மேலும் படிக்க...டிக்டாக் செயலிக்கு தடை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு..

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    வரும் ஐந்து தினங்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அதேபோல் அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்க் கூடும், அதனால் மீனவர்கள் கடலோர கேரளா கர்நாடகா லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published: