தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமாரி, தென்காசி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமாரி, தென்காசி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 • Share this:
  நாளை வட கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  நீலகிரி, தர்மபுரி, சேலம், கோவை, ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 சென்டிமீட்டர் மழையும், கன்னியகுமாரி மாவட்டம் சித்தாருவில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

  மீனவர்களுக்கான எச்சரிக்கை:

  சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மாலத்தீவு லட்சத்தீவு கேரளம் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், ஜூலை 23ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கும், ஜூலை 26ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

  மேலும் படிக்க...

  தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது? தேதி அறிவித்த தலைமை ஹாஜி

  சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் ஜூலை 24-ஆம் தேதி மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
  Published by:Vaijayanthi S
  First published: