தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

கோப்புப்படம்

தமிழகத்தில் தேனி, கோபிசெட்டிபாளைம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  • Share this:
    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை, வாஸ்து நகர், சாணார்பதி உள்ளிட்ட பல இடங்களில், சாலைகளை மழைநீர் சூழ்ந்தது. நஞ்சகவுண்டபாளையத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கீரிப்பள்ளம் ஓடை வெள்ளம், தடப்பள்ளி வாய்க்காலில் கலந்ததால், பாரியூர், வெள்ளாளபாளையம் மற்றும் நஞ்சகவுண்டம்பாளைம் கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் நகரை ஒட்டிய நீர்வீழ்ச்சிகளில் ஓரளவு நீர் கொட்டி வருவதுடன், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல்: 2-வது முறை போட்டியிட்டு தோல்வியடைந்த அதிபர்கள் யார் யார்?

    மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த பகுதியில் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்த நிலையில், மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    பழனி அருகே கொத்தயம் ஊராட்சியில 200 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட நல்லதங்காள் அணையின் கரை சேதமாகி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தொடர் மழையால் புதன்கிழமை இரவு அணை நிரம்பி விட்டதால், விளைநிலங்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், மன்னார்குடி, கச்சனம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் மிதமான மழை பெய்ததால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மேலும் படிக்க...US election Results 2020 | வெற்றியை நெருங்கினார் ஜோ பைடன்.. அமெரிக்க அதிபராக இன்னும் 6 தேர்வுக் குழு வாக்குகளே தேவை..

    இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டி இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருக்கிறார்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் புவியரசன் கூறியுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: