கொளுத்தும் வெயிலுக்கு கூல் பண்ண வருது 'மழை'.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கொளுத்தும் வெயிலுக்கு கூல் பண்ண வருது 'மழை'.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி,  கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் 104 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.


கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 5 செ.மீ மழை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை 4செ.மீ மழை, வாடிப்பட்டி மதுரை மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

Also see...





First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading