முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வட கடலோர தமிழகம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இதில் அதிகபட்ச வெப்பநிலை 35டிகியும்  குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் 15 சென்டி மீட்டர் மழையும், கோவை சோலையார், வேலூர் அம்முண்டி தலா 14 சென்டி மீட்டர் மழையும், திருப்பூரில் 13 சென்டிமீட்டர் மழையும்,  நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் படிக்க...

கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நாளை தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஜூலை 26ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், கோவா மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Heavy rain, Meteorological board